வாழ்வின் முதல் ஐந்து வருடங்களில், அவர்கள் எவ்வாறு சிந்திக்கின்றனர், கற்கின்றனர், மற்றும் நடந்து கொள்கின்றனர், என்பதனை தீர்மானிப்பதற்கு வியப்பான வகையில் சிறுவர் ஒருவரின் மூளை வளரும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு சிறுவரின் ஆற்றலில் முதல் ஐந்து வருடங்கள் மிகவும் முக்கியமானதாகும்.
3 மற்றும் 5 வயதுக்கு இடையில் தரமான முன்பள்ளி கற்றல் சந்தர்ப்பங்களுக்கான அணுகும் வசதியை சிறுவர்களுக்கு வழங்குதல், அவர்களுடைய அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமாகும்.
இலங்கையில், தரமான முன்பள்ளி பாடசாலையின் பயன்களை பெரும்பாலான சிறுவர்கள் தவறவிட்டு விடுகின்றனர். உண்மையில், 3-5 வயதானவர்களில் 48.8 சதவீதமானோர் மாத்திரமே முன்பள்ளி பாடசாலைக்குச் செல்கின்றனர்.
நம்மால் இப்போது இதனை மாற்ற முடியும்.
"பாடசாலை மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மிகச்சிறந்த சந்தர்ப்பத்தை வழங்கி, ஐந்து வயதுக்கு குறைவான அனைத்து சிறுவர்களும், ஆகக் குறைந்தது ஒருவருடம் தரமான முன்பள்ளியின் பயன்களைப் பெறுவதனை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் நான் கோருகின்றேன்"